ஏழை அழுத கண்ணீர்
“ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையச் சொன்னா ஒத்துக்கணும், காக்கா கூட்டத்தப் பாருங்க, அதுக்கு கற்றுக்கொடுத்தது ஆருங்க? ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்” பழைய காலத்து சினிமாப் பாடல்தான் என்றாலும், எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய ஆழமான தத்துவத்தை உள்ளூர உணர்த்தும் இப்பாடல் வரி காற்றோடுகாற்றாய் கலந்து தன் செவிகளுக்குள் தேனாக இசை மீட்டிக் கொண்டிருந்ததை ரசித்தவாறே, வீட்டு முற்றத்தில் கிளைபரப்பி நின்ற கொய்யா மரநிழலில் சாய்மனை ஒன்றில் சாய்ந்தபடி தினகரன் வாரமஞ்சரியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். அகமது லெப்பை வாத்தியார்.
பசியோடு பல நாட்கள் பட்டினி கிடந்தாலும், நாளாந்தம் தினசரிப் பத்திரிகைகளைப் பார்க்காமல் இருப்பதென்பது அவருக்கு இயலாதகாரியம் அன்றும் வழமைபோல் பத்திரிகைச் செய்திகளுக்குள் விழிகளைமேய விட்டபோது, கொட்டை எழுத்துக்களால் ஆன சோகம் சுமந்த அத்துயரவரிகள் அவரின் அடிமனத்தை அப்படியே உசுப்பி, விழிகளில் இருந்து தாரைதாரையாக கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்ததை அவரால் அடக்கமுடியவில்லை. விம்மலும், விசும்பலும் பத்திரிகையை ஈரமாக்க” என்ன உலகமடாசிக்...? எவனெவனோ செய்யுற தனிப்பட்ட கோபதாபங்களால நடக்குற அனர்த்தங்களுக்கு ஒட்டுமொத்த அப்பாவிசனங்கள பலியெடுக்கிறது. கடைய, பள்ளிய ஒடைக்கிறது, குர்ஆன எரிக்கிறது, கூட்டக்கலச்சி, குடிநாசமாக்கி அகதிகளாக அலமோத வெக்கிறது... எந்த மதத்திலேயும் சொல்லப்படாத கொடும, கறுமகாண்டம்” என்று தன் ஆத்திரத்தை மனதிற்குள்ளேயே திட்டித் தீர்த்தவாறு எங்கிருந்தோ ஹோன் எழுப்பிய ஓசைவரும் திசையில் திரும்பிப் பார்த்தார்.
அங்கே அந்நியமதத்தைச் சார்ந்த தனது நீண்ட கால ஆப்த நண்பர்களான சில்வாவும், கந்தையாவும், சிரித்துக் கொண்டே சலாம் கூறி வருவதை அவதானித்த அகமது லெவ்வை வாத்தியாருக்கு சக்தோசம் தாங்க முடியவில்லை. தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு கட்டித்தழுவி அன்போடு வரவேற்றார். உள்ளே தனது இரு பிள்ளைகளோடு ஏதோபேசிக் கொண்டிருந்த அன்பு மனைவி றமீஸாவுக்கு இவர்கள் வந்தவிடயத்தை எத்திவைக்க அவளும் தனக்கே உரித்தான அடக்கமான சிரிப்போடு தன் ஆதரவை வெளிக்காட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். இவர்களுக்கான சிற்றுண்டி தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுவதற்காக மூவினமும் அந்நியோன்யமாய் ஒருதாய் பிள்ளைகள் போல் பழகும் அவ்வூரில் இவர்களின் குடும்ப உறவு இன்று நேற்றல்ல கல்விகற்கும் காலத்தில் இருந்தே இரத்த உறவுபோல தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இற்றைநாள் வரை, கல்யாண வைபவம், பெருநாட்கள் ஏதாவது விசேட சடங்கு சம்பிரதாயங்களுக்கெல்லாம் மாறி மாறி கலந்து விருந்தோம்பல் செய்து மகிழ்வதில் இவர்களுக்கு நிகராக வேறு எவரையுமே ஒப்பிடமுடியாத அளவுக்கு அவ்வளவு நெருக்கமான தொடர்பு, ஐக்கியம். அதுமட்டும் அல்லாமல் மூவரும் ஒரே வயதை ஒத்த பென்ஸன் ஆன வாத்திமார். சில்வா பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்தவரானாலும், தமிழை சரளமாகப் பேசுவதில் பாண்டித்தியம் பெற்றவர் அகமதுலெப்பை, கந்தையா வாத்திமாருக்கும் கூட சிங்களம் தண்ணிபட்டபாடுதான்.
இதனால் மொழிகள் கூட இவர்களை ஒன்றிணைக்கும் பாலமாக அமைந்ததில் வியப்பொன்றும் இல்லை. தினகரனைக் கையில் வைத்துக் கொண்டிருந்த அகமது லெப்பை வாத்தியாரிடம், கந்தையா வாத்தியார்தான் முதலில் கதையை ஆரம்பித்தார். என்ன மச்சான் சொல்லுது பேப்பர்? என்னத்த செல்லுற பாருங்க, வழமையான கொல, கொள்ள, கற்பழிப்பு, ஆட்கடத்தல், அடாவடி, சண்ட அது இதெண்டு அழிஞ்சகேசுகள் தான் கெடக்கு, இதுகளும் இல்லெண்டு சென்னா பேப்பர் காரியாலயங்கள இழுத்து மூட வேண்டும் போதுதான். நான் அறிஞ்சவகையில எல்லாப் படைப்பையும் விட, ஆக மோசமான படைப்பு மனிசன்தான். இனம், மதம், மொழி, சிறுபான்மை, பெரும்பான்மை என வேறுபடுத்தி ஆளஆள் விழுங்கப்பாக்கானுகள், கேடுகெட்ட மூதேசிகள் உலக நாடுகள்ள கூட எங்க தான் சண்டல்ல. அவனவன்ட சுயநலத்துக்காக, சட்டத்த, நீதிய சாம்பலாக்கி அப்பாவிகள் உயிர்மேல ஏறி மிதிக்கும் சாத்தான்கள் ஒழியும் வரை இந்த சமூகம் ஒருகாலமும் திருந்தவே மாட்டாது என்றவன் வாயில் கொஞ்சம் சீனிபோட வேண்டும்
போலிருந்தது கந்தையா வாத்தியாருக்கு.
ஆமா மச்சான், நீ சொல்றது நூறு வீதம் உண்ம நம்ம நாட்ட எடுத்துப்பாத்தா எத்தனை வருஷமா உள்நாட்டு யுத்தம் இனங்களுக்கிடய நடந்திரிச்சி, எத்தன உயிர்கள், உடமைகள் அநியாயமா அழிஞ்சிடிச்சி இதெல்லாம் யார் சொத்து? நம்ம நாட்டுப் பொருளாதாரம் வீணாக காவு கொள்ளப்பட்டிரிச்சே. யாரும் இதப்பத்திச் சிந்திச்சாங்களா? உலக நாடுகள் கேவலமாக நினைக்கும் அளவுக்கு நம்ம நாட்டகாட்டிக் கொடுத்தவங்களுக்கு இதுவரையில என்ன நியாயப் நடந்திரிச்சி? எதுவுமே நடக்கல்ல. இப்பவேலியே பயிரமேயுற கதையா துவேஷத்த கக்கிக் கக்கி அதில குளிர்காயிற சில குள்ளநரிக் கும்பல்கள் சுதந்திரமா சுத்தித் திரியிறதப்பாத்தா இன்னும் செய்யுங்கடா என்று ஊசேத்துற மாதிரித்தான் இரிக்கி நிலம” என்று கூறி முடிப்பதற்குள் உதுமாலெப்பை வாத்தியாரின் மனைவி றமீஸா, குடிப்பான், கடிப்பானோடு நீட்டிய பிலேற்றை வாங்கி, மூவரும் சாப்பிட்டு தேனீரைப் பருகிக் கொண்டிருந்த வேளை,
எதிர்பாராத விதமாக இரண்டு ஆண், பெண் சிறுகுழந்தைகள் அழுக்குப் படிந்த உடலோடும், உடையோடும் ஒரு மதிலோரம் ஒதுங்கி நின்றதைக் கடைக்கண்ணால் அவதானித்த றமீஸா சைகை மூலம் அவர்களை உள்ளே வருமாறு அழைத்தாள். பயத்தால் நடுநடுங்கியவாறு உள்நுழைந்த அவர்களின் தலையைத் தடவியவாறே, ஆசனங்களில் அமரச் செய்து, சிற்றுண்டி பரிமாறிய பின் அவர்களின் விபரத்தை அறிய ஆசைப்பட்டாள் றமீஸா கூச்சப்பட்டவாறே குரல் கொடுத்தான் ஆறுவயசு நிரம்பிய இஸ்மத். இது என்ர தங்கச்சி இர்ஸானா, வயசி அஞ்சி பக்கத்துலதான் எங்கட ஊரு.
வாப்பா, உம்மா கூலிவேல செஞ்சிதான் எங்கள படிப்பிச்சவங்க கதையை முடிப்பதற்குள் அவன் தொண்டை கரகரத்து அடைக்க. அவனின் கண்களில் இருந்து மாலைமாலையாக நீர்வடியத் தொடங்கியதைப் பார்த்த அனைவருடைய கண்களில் இருந்தும் போட்டிபோட்டுக் கொண்டு நீர் அழிந்து கொண்டிருந்தது. றமீஸா விடவில்லை. சொல்லுடாமனே; சொல்லு... பிறகு என்னதான் நடந்தது? நாங்க இரிக்கிறம் இல்லியா; பயப்புடாமச் சொல்லு, என்றதும், மீண்டும் கரகரத்த தொனியில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான். திடீருண்டு யாரோ சிலர் முகமூடி அணிந்து எங்கட வீட்ட நோக்கி ஓடோடி வந்தாங்க.
குண்டுச்சத்தம் ஒன்று வெடிக்கும் ஓசகேட்டது. அதுக்குப் பொறகு வீடு சாமான் எல்லாமே பத்தி எரிஞ்சி கொண்டிருந்தது. அந்த நேரம் நானும், தங்கச்சியும் வெளியில விளையாடிட்டு நிண்டம். உள்ளே உம்மாவும்.. வாப்பாவும்... மேலும் அவனால் சொல்லுவதற்கு தைரியம் வரவில்லை கண்கள் இருண்டு... தலைகத்தி விழப்போகும் நிலையில் இருந்த அவனை ஒருவாறு தாங்கிப் பிடித்த சில்வா, கந்தையாவோடு அனைவரும் கதறி ஆழ ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்களின் இதயங்களில் இருந்து இடி, மின்னல் பூகம்பம், சுனாமி அவை மீண்டும் பூதாகரமாய் வெடித்துச் சிதற இரக்கம் ஏதுமே இல்லாத அரக்ககுணம் கொண்ட கரையாக்கன் பசாசுகளை திட்டித் தீர்த்தவாறே, குழந்தைகளை ஆறுதல்படுத்தி, “இனி நீங்க எங்கயுமே போகத் தேவல்ல இது ஒங்கட வீடு, உம்மா, வாப்பா, சகோதரங்களாக நாங்க கவனிச்சிக் கொள்ளுவம் சரியா?” என்ற றமீஸா, அவர்களை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து ஆதரித்த விதத்தை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கந்தையாவும், சில்வாவும், தங்கள் வாய்க்குள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டார்கள்.
இப்படியான சில நல்ல மனிதர்களாலதான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கு இல்லேன்னா எப்பவோ அழிஞ்சிபோயிருக்கும். ஏழ அழுத கண்ணீர் கூரிய வாள் என்பது இப்படியான பிசாசுகள் உணரும் காலம் வராமலா போகும் என்று சபித்து விடை பெறும் அவ்வேளை பக்கத்து வீட்டு வானொலியில் ஏற்கனவே ஒலித்த அதே பாடல் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. “ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும், இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்தப்பாருங்க. அதுக்கு கற்றுக் கொடுத்தது ஆருங்க...? ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்..." இந்தத் தத்துவார்த்தமான வரிகள் இனவாதிகள் என்கின்ற கரையாக்கன் பசாசுகளின் செவிட்டுக் காதுக்களுக்குள் போய்ச் சேருமா? இதற்குக்காலம்தான் பதில் சொல்லவேண்டும்.