சுதாகரனின் பிள்ளைகள் வடக்கு ஆளுநருடன் கொழும்பில் சந்திப்பு
ஆயுள் தண்டனைக் கைதியாக சிறைவைக்கப்பட்டுள்ள தமது தந்தைக்குப் பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் என்று கோரும் மகஜரை, ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று வட மாகாண ஆளுநரிடம்நேரடியாகக் கையளித்தனர்.
தமது கோரிக்ைக அடங்கிய மகஜரை ஜனாதிபதிக்குக் கையளிப்பதற்காக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குறேயை நேற்று கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கையளித்துள்ளனர்.
மகஜரைக் கையேற்றுக்ெகாண்ட ஆளுநர் ரெஜினோல்ட் குறே, சுதாகரனின் பிள்ளைகளுடன் நீண்ட நேரம் உரையாடினார். தாயை இழந்து பரிதவிக்கும் பிள்ளைகளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள மகஜரை, ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவரிடம் கையளித்து நிலைமையை விளக்கிய பின்னர், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
ஆளுநர் றெஜினோல்ட் குறே, யாழ் நகர் வந்த பின்னர், இவ்விரு பிள்ளைகளுக்கும் தேவையான உதவிகளை மேற்கொள்வதாகவும் நேற்று உறுதியளித்தார். சுதாகரனின் பிள்ளைகள் ஆளுநரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை சிவன் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் கணேஷ் வேலாயுதன் மேற்கொண்டிருந்தார்.
தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 15ஆம் திகதி மரணமடைந்துள்ள நிலையில் அவர்களின் இரு பிள்ளைகளும் அநாதரவாகியுள்ளனர்.
இரு பிள்ளைகளும் தமது பேத்தியாருடன் தங்கியிருக்கிறார்கள். அவரும் வயது முதிர்ந்த நிலையிலும் வறுமையிலும் பிள்ளைகள் இருவரையும் வளர்ப்பதற்கு மிகவும் கஸ்டப்படுகின்றார்.
இந்நிைலமைகளை கருத்தில் கொண்டு பிள்ளைகளின் தந்தை ஆனந்தசுதாகரை பொது மன்னிப்பில் விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்து நிலைமைகளை விளக்குவதற்கான ஏற்பாடுகளை வட மாகாண ஆளுநர் ஊடாக திரு.கணேஷ் வேலாயுதம் மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர்பிலும் ஜனாதிபதியைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்குரிய அணுகுமுறைகள் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டிருநதாகவும் அதற்கும் தீர்வொன்றைப் பெற்றுக்ெகாள்ள இந்தச் சந்திப்பின் ஊடாக முயற்சிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆளுநருடனான இச்சந்திப்பில் வேலாயுதத்துடன் சுதாகரனின் பிள்ளைகளான கனிஸ்வரன் (12) சங்கீதா (10) ஆகியோரும் பிள்ளைகளின் பேத்தி, மாமனார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, மகாசங்கத்தினரையும் சந்தித்து இதுவிடயத்தில் ஆதரவு வழங்குமாறு கோரிக்ைக விடுக்கவிருப்பதாகவும் திரு.வேலாயுதம் மேலும் தெரிவித்தார். இதுவிடயத்தில் ஆதரவு வழங்குவதாகவும் அதுபற்றி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்புவதாகவும் பத்தேகம சமித்த தேரர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
