Breaking News

தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 3766 பேருக்கு இடமாற்றம்

தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 3766 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் உள்ள தேசிய பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஆசிரியர் இடமாற்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. ஒரே பாடசாலையில் பத்து வருட சேவை காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் இடமாற்ற வேலைத்திட்டத்தின் 3வது கட்டத்தின் அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
4473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவிருந்த அதேவேளை தவிரிக்கமுடியாத காரணங்களின் அடிப்படையில் சில ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தை வழங்காமல் இருக்க ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.