Breaking News

பெல்ஜியத்தில் சாக்லேட் திருவிழா ஆரம்பம்

ஐரோப்பாவின் பெல்ஜியத்தில் உள்ள டர்பை நகரில் பிரபலமான சாக்லேட் திருவிழா ஆரம்பமானது.
இந்த விழாவில் 50க்கும் மேற்பட்ட சாக்லேட்டால் செய்யப்பட்ட யானை, குரங்கு, முதலை, பறவைகள் மற்றும் முயல் போன்ற விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பல நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.
உலகின் மிகச்சிறிய நகரான டர்பையில் உலகின் மிகப்பெரிய சாக்லேட் திருவிழா இதுவாகும். இந்த நிகழ்வு ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விழா உலகில் உள்ள அனைத்து கலைஞர்களும் ஒன்றாக சந்திக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளின் சாக்லேட் உருவங்கள் சத்ரூபமாக வடிக்கப்படிருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பல நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களை இந்த நிகழ்வு கவர்ந்திழுத்துள்ளது. இதுவரை 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையார்கள் பார்த்து ரசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.