Breaking News

இந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும்.
இதையடுத்து இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். அவருடன் இணைந்து கபிலன் வைரமுத்துவும் வசனம் எழுத இருக்கிறார்.

கபிலன் வைரமுத்து ஏற்கெனவே ‘கவண்’ படத்தின் கதையை சுபாவோடு சேர்ந்து எழுதியிருக்கிறார். அத்துடன், திரைக்கதை மற்றும் வசனத்தையும் சுபா, கே.வி.ஆனந்த் ஆகியோரோடு சேர்ந்து எழுதியுள்ளார். மேலும், அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் வசனம் மற்றும் திரைக்கதையிலும் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.