காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு: சுப்ரீம் கோர்ட் கெடு முடியும் நிலையில் மத்திய அரசு புது நடவடிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்ச நீதிமன்ற கெடு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மத்திய அரசு திடீர் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக கண்காணிப்பு குழு ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் தமிழகம், கர்நாடகா இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பல்வேறு சட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இறுதி உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 15 நாட்களாக நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், கடந்த 9ம் தேதி தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகளை ஆலோசனை நடத்தியது. அப்போது, மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
அதைத்தொடர்ந்து பேட்டியளித்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், ‘‘உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. மேலும், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை தான் அமைக்க வேண்டும் என்று உத்தரவில் எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் கூறியுள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்” என்றார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுவதாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக அதிகாரமே இல்லாத கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையின் காவிரி விவகாரத்தில் ஒரு தீர்வை காண்பதற்காக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கென தனியாக 9 பேர் கொண்ட காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய நீர்வளத்துறை அமைக்க உள்ளது. இதுகுறித்த வரைவை இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது’’ என்றனர். காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இருக்கும் அதிகாரம், இந்த 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவிற்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவது விவசாயிகள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்துக்கு கர்நாடகா 192 டிஎம்சி தர வேண்டும். சுப்ரீம் கோர்ட், இதை 177.25 டிஎம்சியாக குறைத்து விட்டது. அதேசமயம், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க உத்தரவிட்டது. இந்த அவகாசம், வரும் 29 ம் தேதியுடன் முடிகிறது. வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது. வாரியம் கிடையாது; கண்காணிப்பு குழு அமைக்க வரைவு அறிக்கை தயாராவதாக தகவல்.