Breaking News

முனீஷ்காந்துக்கு திருமணம்!!

நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்திற்கு இன்று திருமணம் நடைபெற்றது.
‘முண்டாசுப்பட்டி’, ‘ஜிகர்தண்டா’, ‘இன்று நேற்று நாளை’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘மரகத நாயணம்’ ‘பசங்க2’போன்ற படங்களின் மூலம் தனது நகைச்சுவை முத்திரையை பதித்தவர் நடிகர் முனீஷ்காந்த்.
சிங்கப்பூரில் இருந்து சினிமா வாய்ப்பு பெறுவதற்காகவே கோடம்பாக்கம் நாடி வந்தவர் இவர். தற்சமயம் தமிழ் சினிமாவில் முனீஷ் இணைந்துள்ளார்.
இந்நிலையில் இன்று இவருக்கும் மணமகள் தேன்மொழிக்கும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இந்த இளம் ஜோடியை வாழ்த்தினர்.