திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்-ஸ்ரேயா!!
‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், ஸ்ரேயா. ‘மழை,’ ‘கந்தசாமி,’ ‘குட்டி,’ ‘திருவிளையாடல் ஆரம்பம்,’ ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்,’ ‘சிவாஜி’ உள்பட பல படங்களில் நடித்த அவர், தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேவை அண்மையில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு மிக நெருக்கமான நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. தனக்குத் திருமணம் நடந்தது வெளியில் தெரியவேண்டாம் என்று ஸ்ரேயா நினைத்ததால் தான் அவர், ‘ரகசியமாக’ திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் “திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். அதுவும் கதாநாயகியாகவே நடிப்பேன்” என்று ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
“2 அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கதாநாயகிகளுடன் நடிப்பதில், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என் கதாபாத்திரம் திருப்திகரமாக இருக்கிறதா? என்பதை மட்டும் பார்க்கிறேன்” என்கிறார் ஸ்ரேயா.
