பாகுபலி பிரபாஸூக்கு மெழுகால் சிலை!!
நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்தப் படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பும், விருதுகளும் கிடைத்தன. விரைவில் இந்தப் படம் சீனாவில் வெளியிடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நடிகர் பிரபாஸ் தற்போது ‘சஹோ’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததற்காக உலகின் புகழ்பெற்ற Madame Tussauds அருங்காட்சியகத்தில் பிரபாஸ் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே ஷாருக்கான், அமிதாப் பச்சன், மோடி எனப் பலருக்கும் அங்கு சிலை உள்ளது.
சமீபத்தில் பிரபாஸ்க்கும் அங்கு மெழுகாலான சிலை வைக்கப்பட்டது. மேலும் இங்கு பல உலக பிரபலங்களின் சிலைகளும் உள்ளன. ஆனால் வருபவர்கள் எல்லாம் பிரபாஸ் பக்கம் தான் நிற்கிறார்களாம். அங்கு பிரபாஸ் சிலையுடன் செல்பி எடுப்பவர்கள் தான் மிக அதிகம் என அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
