Breaking News

மெர்சல் படத்துக்கு பிரிட்டனில் விருது!!


பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த படமாக விஜய்யின் மெர்சல் திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அட்லி இயக்கிய விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.


மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
தற்போது இப்படத்துக்கு பிரிட்டன் நாட்டில் மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018 க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கி்டைத்துள்ளது.