எத்தியோப்பியாவின் தலைமை அமைச்சராக அபிய் அகமது தெரிவு!!
எத்தியோப்பியாவின் புதிய தலைமை அமைச்சராக அபிய் அகமது தெரிவு செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியா மக்கள், புரட்சிகர ஜனநாயக முன்னணி கூட்டணியைச் சேர்ந்த 180 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒருமனதாக அவரைத் தெரிவு செய்துள்ளனர் என்று அந்த நாட்டைச் சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எத்தியோப்பியா, ஆபிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாடு உலகின் நிலம் சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள் தொகை கொண்ட நாடாாகும்.
அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஐலிமரியாம் தேசாலென் கடந்த 2012 ஆ-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டின் வளர்ச்சி நன்மைகள் சாதாரண மக்களுக்குச் சரியாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எத்தியோப்பியாவில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தீர்வு காண தலைமை அமைச்சர் ஐலிமரியாம் தேசாலென் நீண்ட காலமாக முயற்சி செய்துவந்தார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தலைமை அமைச்சர் ஐலிமரியாம் தேசாலென் கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி ராஜினாமா செய்தார்.
