Breaking News

சினேகனும் ஓவியாவும் ஜோடி சேருகின்றனர்!!

‘பிக் பாஸ்’ புகழ் கவிஞர் சினேகனும், நடிகை ஓவியாவும் ‘பனங்காட்டு நரி’ படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஹரிஷ் – ரைசா இருவரும் ‘ பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடலாசிரியர் சினேகனும், நடிகை ஓவியாவும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.
அந்தப் படத்துக்கு‘பனங்காட்டு நரி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.‘யமுனா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு, இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவில் இந்தப் படத்தின் முதல் பக்கத்தை ஓவியா தான் வெளியிட்டார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.