Breaking News

பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்­ட ­ சிமித்

தென்­னா­பி­ரிக்க அணிக்கு எதி­ராக தற்­போது நடை­பெற்­று­வ­ரும் டெஸ்ட் ஆட்­டத்­தில், ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் வீரர் பான்­கு­ரொப்ட், பந்தை திட்­ட­மிட்­டுச் சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரம் பூதா­க­ர­மாக வெடித்­துள்ள நிலை­யில் அணித் தலை­வர் சிமித் மற்­றும் உப­த­லை­வர் வோர்­ணர் இரு­வ­ரும் பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்­ட­னர்.
தென்­னா­பி­ரிக்கா -– ஆஸ்­தி­ரே­லியா அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்­றா­வது டெஸ்ட் ஆட்­டம் தென்­னா ­பி­ரிக்­கா­வின் கேப்­ட­வு­னில் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. நேற்­று­முன்­தின மூன்­றாம் நாள் ஆட்­டத்­தின்­போது தென்­னா­பி­ரிக்க அணி துடுப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்த பொழுது, ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் ஆரம்­பத் துடுப்­பாட்ட வீரர் பான்­கு­ரொப்ட் பந்தை திட்­ட­மிட்­டுச் சேதப்­ப­டுத்­தி­னார்.
அவர் ஒரு­வ­கைப் பொரு­ளைக் கொண்டு (சான்ட் பேப்­பர் என்று சொல்­லப்­ப­டு­கி­றது) பந்­தைச் சேதப்­ப­டுத்­தும் காணொலி பன்­னாட்­டுக் கிரிக்­கெட் சபை­யி­டம் கொடுக்­கப்­பட்­டது. இந் தக் குற்­றத்தை அணித் தலை­வர் சிமித் ஏற்­றுக்­கொண்­டதை அடுத்து, அவ­ரும் உப­த­லை­வர் வோர்­ண­ரும் பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்­ட ­னர். ஆஸ்­திரே­லிய அர­சும் இந்த முடிவை வர­வேற்­றுள்­ளது.