Breaking News

ஸ்ரீதுர்காவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

தொலைக்காட்சி சீரியல்கள் இப்போது மக்களிடம் மிகவும் பிரபலம். அதிலும் திரையரங்குகளுக்கு சென்று படங்கள் பார்க்கும் சில பேர் வீட்டில் சீரியல் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு இளைஞர்களை கவரும் வண்ணம் நாயகிகளை தேர்வு செய்வது, காதல் காட்சிகள் வைப்பது என்று சீரியல்களின் தரமே மாறிவிட்டது.
அப்படி அன்றைய காலகட்டத்தில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதுர்கா. இவர் 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார்.
தற்போது மீண்டும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இவர் சினிமா பற்றியும், திருமண வாழ்க்கை பற்றியும் பேட்டி கொடுத்திருந்தார். அதில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாவது யூடியூபில் அவரை பற்றி நிறைய தகவல்கள் உலா வருகிறதாம். ஆனால் அது எல்லாம் முழுக்க முழுக்க தவறான தகவல்கள், ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.