விமலின் மகள் சாதனை!!
தேசிய சுதந்திர முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகள் ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சை எழுதிய விமல் வீரவன்சவின் மகள், விமாஷா விஷ்வாதரி வீரவன்ச கொழும்பு விஷாகா கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்.
நேற்று முன்தினம் வெளியான பரீட்சை முடிவுகளுக்கமைய அவர் அனைத்து பாடங்களிலும் ஏ சித்திப் பெற்றுள்ளார்.
தனது தந்தை 3 மாதங்கள் சிறைச்சாலையிலும், தாயார் அந்த காலப்பகுதியில் சிறைச்சாலையில் இருந்த போதிலும் அவர் பரீட்சை தன்னைப்தயார்படுத்தி சிறப்பாக பரீட்சை எழுதியுள்ளார் என்று அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
