Breaking News

ரகுமான் இசையில் பாடுகிறார் விஜய்!!

சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் படத்துக்குப்படம் பின்னணி பாடி வந்தவர் விஜய். ஒருகட்டத்தில் பாடுவதை நிறுத்தினார். அந்த வகையில், சச்சின் படத்திற்கு பிறகு 7 ஆண்டுகளாக பாடாமல் இருந்த விஜய், துப்பாக்கி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கூகுள் கூகுள் பாடலை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.

ஜில்லாவில் கண்டாங்கி, கத்தியில் செல்பி புள்ள, தெறியில் செல்ல குட்டி என ஹிட் பாடல்களை பாடியவர், தற்போது தான் நடித்து வரும் 62வது படத்திலும் ஒரு பாடல் பாடப்போகிறார்.
இதுவரை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடாத விஜய், இந்த படத்தில் முதன் முறையாக பின்னணி பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான்- விஜய் கூட்டணியில் ஒரு தெறிக்கும் பாடல் காத்திருக்கிறது.